தளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது

´சர்கார்´ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. 

நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு விஜய் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது படப்பிடிப்பு முடித்து விட்டு கிளம்பும்போது விஜய் காரிலிருந்து கீழே இறங்கி ரசிகர்களை நோக்கி கையசைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. 

மேலும் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியை எப்படி படமாக்கியுள்ளனர். அப்போது யோகி பாபு பேசும் வசனம் என்ன என்பது பற்றி இணையத்தில் செய்தியாக வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில், “ரசிகர்களுக்குப் பெரிய வேண்டுகோள். ‘தளபதி 63’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம். உங்களை மகிழ்விக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர். 

2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். எனவே, அவருடைய உடற்கட்டு, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது தளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது Reviewed by Vanni Express News on 2/08/2019 05:23:00 PM Rating: 5