விஸ்வம் உயர்கல்வி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு

-முதல்வரின் ஊடகப்பிரிவு 

வைத்திய கலாநிதி டி. பரமானந்தம் கல்வி நிறுவனத்தின் (Viswam Campus) ஆரம்ப நிகழ்வு (திறப்புவிழா) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் கடந்த 2019.01.30 ஆம் திகதி 3.00 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசகரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டார். 

இந் நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் அவர்கள் க.பொ.த சாதாரணதரம், மற்றும் உயர்தரம் நிறைவு செய்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர்வதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் விஸ்வம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்,இதனை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  

மேலும் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் மாணவர்கள் உயர்கல்வியில் கல்வி மற்றும் தொழில் சார் கற்கை நெறிகளைக் கற்றுக்கொண்டு கற்ற நல்ல இளைஞர் சமுதாயத்தை உருவாக்க அனைவரும் திடசங்கற்பம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு விஸ்வம் பல்கலைக்கழ நிர்வாகத்தினால் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந் நிகழ்வில் விஸ்வம் பல்கலைக்கழத்தின் நிர்வாக உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பொறுப்பாளர்கள், மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
விஸ்வம் உயர்கல்வி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு விஸ்வம் உயர்கல்வி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு Reviewed by Vanni Express News on 2/02/2019 12:44:00 AM Rating: 5