உலக கிண்ணத்தை வெல்ல இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முரளீதரன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. 

இதில் இந்தியா அல்லது இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று வருகிறது. 

என்னை பொறுத்தவரை அஸ்வின் இன்னும் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் தான். குல்தீப் யாதவும், யகவேந்தி சாயிலும் இந்திய துணைக் கண்டத்தில் சிறப்பாக வீசுகிறார்கள். 

உலக கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் அவர்களது பந்து வீச்சு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இங்கிலாந்து ஆடுகளங்கள் ‘சுவிங்’ பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். 

20 ஓவர் போட்டியின் வருகையால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு பாதிப்பு இல்லை. 

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. திறமையான வீரர்கள் தொடர்ச்சியாக உருவாகாத நிலை, ஆர்வமின்மையால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவே மாறும் எண்ணம் இல்லை. 

அவுஸ்திரேலிய அணியும் தனது பழைய திறனை இழந்துவிட்டது என அவர் தெரிவித்தார்.
உலக கிண்ணத்தை வெல்ல இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்பு உலக கிண்ணத்தை வெல்ல இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்பு Reviewed by Vanni Express News on 2/10/2019 11:26:00 PM Rating: 5