சதம் விளாசினார் மேக்ஸ்வெல் - தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 47, தோனி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இந்தப் போட்டியில் விராட் கோலியும், தோனியும் ஜோடி சேர்ந்து 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்தனர். இருவரும் போட்டி போட்டு சிக்ஸர் மழை பொழிந்தனர். விராட் கோலி 6, தோனி 3 சிக்ஸர்கள் விளாசினர்.

பின்னர், 191 ரன் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 22 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்தது. இருப்பினும், ஷார்ட், மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஷார்ட் 40(28) ரன்னில் ஆட்டமிழக்க மேக்ஸ்வெல் சிக்ஸர் மழை பொழிந்தார். 

அதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. இந்திய பந்துவீச்சாளர் அனைவரது பந்துகளை அவர் அடித்து நொறுக்கினார். அதிரடியாக விளையாடி மேக்ஸ்வெல் சதம் விளாசினார்.

இறுதி ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 194 ரன் குவித்து வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
சதம் விளாசினார் மேக்ஸ்வெல் - தொடரை வென்றது ஆஸ்திரேலியா சதம் விளாசினார் மேக்ஸ்வெல் - தொடரை வென்றது ஆஸ்திரேலியா Reviewed by Vanni Express News on 2/28/2019 12:10:00 AM Rating: 5