மேக்ஸ்வெல் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை என இந்தியக் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

2வது டி20 போட்டி தொடர்பாக பேசிய விராட், “குறுகிய தொடராக இருந்தாலும், விளையாட்டுத்திறனை உணர்த்திவிட்டது. ஆஸ்திரேலிய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். 

190 ரன்கள் என்பது எந்த ஒரு மைதானத்திலும் சிறந்த ரன் குவிப்பு தான். ஆனால் மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இரவு நேரம் பனிப்பொழிவு என்பது சற்று சிரமத்தை ஏற்படுத்தியது.

மேக்ஸ்வேல் பேட்டிங் செய்யும் போது, போட்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாட வேண்டும் என அனைத்து அணிகளும் நினைக்கும். ஆனால் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம். பனிப்பொழிவு இல்லையென்றால், ஆஸ்திரேலியாவிற்கு இன்னும் நெருக்கடி கொடுத்திருப்போம். 

எந்த ஒரு வீரரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாம் நேரம் தரவேண்டும். அதனால் நான் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் தரவில்லை. அடுத்த ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். அதில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி தோற்றுள்ளது. இந்த போட்டிகளிலுமே இந்தியா வெற்றியை நெருங்கி, தோல்வியடைந்துள்ளது. கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளார் சிறப்பாக பந்துவீசி இருந்தால் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம் எனப்படுகிறது. 

இந்தத் தொடரைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
மேக்ஸ்வெல் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - விராட் கோலி மேக்ஸ்வெல் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - விராட் கோலி Reviewed by Vanni Express News on 2/28/2019 11:46:00 PM Rating: 5