மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

-க.கிஷாந்தன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்திலிருந்து நேற்று மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா கிலண்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சவுந்தர்ராஜ் கீத்தலா என்ற மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களாகக் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார் என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு Reviewed by Vanni Express News on 2/05/2019 12:19:00 AM Rating: 5