மனைவியுடன் தனிப்பட்ட தகராறு விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக் கொலை

பங்களாதேஷில் விமானமொன்றை கடத்த முயன்ற ஒருவர் அந்நாட்டு கொமாண்டோ பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்

பங்களாதேஷ் தலைநனர் டாக்காவில் இருந்து டுபாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிமான் பங்களாதேஷ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்திலிருந்த குறித்த நபர் கைத்துப்பாக்கியொன்றை ஏந்தியவாறு விமானத்தை தகர்க்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.பின்னர் அவர் விமானிகளின் அறைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது மனைவியுடன் தனிப்பட்ட தகராறு ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ள அவர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவிற்கு தொலைபேசியூடாக கதைக்க வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து விமானம் சிட்டகொங்கிலுள்ள அமானன் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் தரையிறக்கப்பட்டதுடன் அதிலிருந்த 148 பேர் மற்றும் விமான சேவை பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் விமானத்திற்குள் சென்ற கொமான்டோ துருப்பினர் அவருக்கு சரணடையுமாறு கோரியுள்ளதுடன் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக பங்களாஷே் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது அவர் விமான சேவை பணியாளர் ஒருவரை மாத்திரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் அதன்போது தான் வெடிபொருட்களை வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார்.

எனினும் துப்பாக்கிச்சூட்டின் பின் நடத்திய சோதனையில் அவ்வாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

25 வயதுடைய பங்களாதேஷ் பிரஜையான இவர் தொடர்பில் இதுவரை மேலதிக தகவல்கள் வௌியாகவில்லை என்பதுடன் அவர் மனநோயாளராக இருக்க்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
மனைவியுடன் தனிப்பட்ட தகராறு விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக் கொலை மனைவியுடன் தனிப்பட்ட தகராறு விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக் கொலை Reviewed by Vanni Express News on 2/25/2019 12:04:00 PM Rating: 5