மினுவாங்கொடை மக்தப் பரிசளிப்பு விழா

- மினுவாங்கொடை நிருபர் ஐ. ஏ. காதிர் கான் 

அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் மினுவாங்கொடை - மக்தப் மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜின் நான்காவது வருட மக்தப் பரிசளிப்பு விழா, (09) சனிக்கிழமையன்று, மினுவாங்கொடை "பிரஜா" நகர சபை மண்டப வளவில், மக்தப் பிரதம முஅல்லிம் மெளலவி எம்.எஸ்.எம். நஜீம் (இல்ஹாரி) தலைமையில் நடைபெற்றது. 

மக்தப் போதனாசிரியர் மெளலவி எம்.ஆர்.எம். றிழ்வான் (நிழாமி), கம்பஹா மாவட்ட மக்தப் மேற்பார்வையாளர் மெளலவி எம். நஸ்மி (ஜாமிஈ), கண்டி - உடத்தலவின்ன, ஹக்கீமிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மெளலவி ஹிதாயத்துல்லாஹ் றஸீன் (ரஹ்மானி), கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம். நிஸார், மினுவாங்கொடை பள்ளிவாசல் தலைவர் எம்.ஆர்.எம். ஸவாஹிர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

சான்றிதழ்களையும், நினைவுச் சின்னங்களையும் பெற்றுக்கொண்ட மக்தப் ஆறாம் கிதாபு மாணவர்களையும், மக்தப்பின் ஏனைய மாணவ மாணவிகளையும் படங்களில் காணலாம்.
மினுவாங்கொடை மக்தப் பரிசளிப்பு விழா மினுவாங்கொடை மக்தப் பரிசளிப்பு விழா Reviewed by Vanni Express News on 2/10/2019 09:57:00 PM Rating: 5