கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்து சிக்கிக் கொண்ட நபர்

காலி பிரதான வீதியில் கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்த நபர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். 

நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறித்த நபர் காலி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் அடிக்கடி கப்பம் பெற்று வருவதாகவும், அதன்படி நேற்று குறித்த வர்த்தக நிலையத்திலும் கத்தியை காண்பித்து கப்பம் பெற முயற்சித்துள்ளார். 

சம்பவத்தில் காயமநை்த நபர் கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்து சிக்கிக் கொண்ட நபர் கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்து சிக்கிக் கொண்ட நபர் Reviewed by Vanni Express News on 2/27/2019 03:00:00 PM Rating: 5