ஆட்டு இறைச்சி உண்பவர்களா நீங்கள் ? அப்படியாயின் அதிர்ச்சியான உண்மைகள் இதோ

விரும்பத்தகுந்த இறைச்சிகளில் ஆட்டு இறைச்சிக்கு தனியானதொரு இடமுண்டு. எனினும் ஆசையாக வாங்கும் ஆட்டு இறைச்சி சுத்தமாக, ஆரோக்கியமானதாக உள்ளதா? என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

பொதுவாக ஆட்டு இறைச்சி வாங்கும் பொழுது, தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால், அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம். 

ஆனால் தொடைப் பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும் சாப்பிடச் சற்று கடினமானதாக இருக்கும். அதற்குக் காரணம், ஆடு நடக்கின்ற பொழுது, அதிகமாக அசைகின்ற தசைகள் கடின தன்மை கொடுத்தாக மாறுவதாகும்.

எனவே ஆட்டு இறைச்சியை வாங்கும் பொழுது, நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்குப் பின்புறம் உள்ள முதுகுத் தசைப் பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

இறைச்சி பழையதா? அல்லது புதியதா? என்பதை வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால், வெட்டப்படும் போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்து விடும். எங்கும் தேங்கியிருக்காது.

மாறாக நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால், ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கியிருக்கும். இதேவேளை ஆடு இறந்த பின்னர், அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும்.

எனவே ருசியாக, விரும்பி உண்ணும் ஆட்டு இறைச்சியை வாங்குவதற்கு முன்னர், மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் கொள்வது, எமது உடல் ஆரோக்கியத்திற்கு நம்மை பயக்கும்.
ஆட்டு இறைச்சி உண்பவர்களா நீங்கள் ? அப்படியாயின் அதிர்ச்சியான உண்மைகள் இதோ ஆட்டு இறைச்சி உண்பவர்களா நீங்கள் ? அப்படியாயின் அதிர்ச்சியான உண்மைகள் இதோ Reviewed by Vanni Express News on 2/25/2019 11:24:00 PM Rating: 5