அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வெளிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடைவதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இன்று நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 
அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் Reviewed by Vanni Express News on 2/25/2019 05:59:00 PM Rating: 5