இந்த ஆண்டில் 113 கிலோ ஹெரோயின் மீட்பு - 4370 சந்தேகநபர்கள் கைது

இந்த ஆண்டு ஜனவரி 01ம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 06ம் திகதி வரை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 113 கிலோ 899 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. 

அதேநரம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 4370 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இதேவேளை அந்தக் காலப்பகுதியில் 519 கிலோ 830 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

அதனுடன் தொடர்புபட்ட 4290 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்புக்களை நடத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த ஆண்டில் 113 கிலோ ஹெரோயின் மீட்பு - 4370 சந்தேகநபர்கள் கைது இந்த ஆண்டில் 113 கிலோ ஹெரோயின் மீட்பு - 4370 சந்தேகநபர்கள் கைது Reviewed by Vanni Express News on 2/12/2019 05:14:00 PM Rating: 5