போர் வந்துவிட்டால் எனது, மோடி கட்டுப்பாட்டில் நிலைமை இருக்காது - இம்ரான்கான்

பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும், போரால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய இம்ரான்கான், “முதல் உலகப் போர், 2ஆம் உலகப் போர் என போர்களை உலகம் சந்தித்துள்ளது, அதனால் இழப்புகள் ஏராளம். உலகில் நடைபெற்ற அனைத்து போர்களும் தவறான புரிதலால் நடந்து வருகின்றன. போரினை தொடங்குபவர்களுக்கு, அது எங்கு முடியும் என்பது தெரியாது. 

இருநாடுகளிடமும் ஆயுதங்கள் உள்ளது. நாம் தவறான மதிப்பீடு செய்யலாம். இருநாடுகளிடையேயான உறவை மேம்பட செய்ய வேண்டும். போர் தொடங்கிவிட்டால், நிலைமை என்னுடைய அல்லது நரேந்திர மோடியில் கட்டுப்பாட்டில் அது இருக்காது.

புல்வாமா தாக்குதல் பற்றி இந்தியா விசாரித்தால் ஒத்துழைப்பு தர தயார். இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. அதேபோல், பயங்கரவாதிகளின் மண்ணாக இருக்கவும் பாகிஸ்தான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியின் இந்திய விமானி பிடிபட்டது தொடர்பாக இம்ரான்கான் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாக ரவீஷ் குமார், இந்திய விமானி பிடிபட்டது தொடர்பாக பாகிஸ்தான் எவ்வித தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றார். 

ஒருவேளை விமானி பாகிஸ்தான் வசமிருப்பது உறுதி செய்யப்பட்டால் தூதரகரீதியாக அல்லது ஐ.நா. மூலம் அவரை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
போர் வந்துவிட்டால் எனது, மோடி கட்டுப்பாட்டில் நிலைமை இருக்காது - இம்ரான்கான் போர் வந்துவிட்டால் எனது, மோடி கட்டுப்பாட்டில் நிலைமை இருக்காது - இம்ரான்கான் Reviewed by Vanni Express News on 2/27/2019 05:47:00 PM Rating: 5