கம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு

மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் இலவச செயலமர்வான எச்சிவ் மோர் (ACHIVE More) ஊடகம் மற்றும் உள ஆளுமை விருத்தி செயலமர்வு கம்பளை ஸாஹிரா கல்லூரியில் இன்று நடைபெற்றது.

கல்லூரியின் ஊடகப்பிரிவு பொருப்பாசிரியர்களான திருமதி ஷாமியா மற்றும் திருமதி ஷிஹாரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வில்  ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமம், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் சிறப்பு விரிவுரை நிகழ்த்தினர்.

செயலமர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஊடகத்தின் முக்கியத்தும் ஊடக ஒழுக்கங்கள் உள்ளிட்ட பல விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் ஆக்கபூர்வமான சமர்பித்தல் சம்பந்தமான செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அது மட்டுமன்றி இலக்குகளை நிர்ணயித்தல், எளிமையான கற்றல் முறைகள் மற்றும் சாதனையாளர்களாக மாறுவது எவ்வாறு போன்ற விடயங்களும் ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீனால் கலந்துரையாடப்பட்டன. அத்தோடு, பாடசாலையின் மாணவர் ஊடகப்பிரிவின் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செயலமர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான ஒருநாள் இலவச செயலமர்வு,  நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், அரபுக்கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான செயலமர்வுகளை இலவசமாக நடத்த வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 0777 362 492 அல்லது  0777 162 511
கம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு கம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு Reviewed by Vanni Express News on 2/25/2019 10:55:00 PM Rating: 5