மன்னார் சென்.சேவியர் கல்லூரியில் றோல் பந்து மைதானம் திறப்பு - மஸ்தான் M.P பங்கேற்பு

- ஊடகப்பிரிவு


மன்னார் சென்.சேவியர் கல்லூரியில் றோல் பந்து மைதானம் திறப்பு - பிரதம விருந்தினராக கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் பங்கேற்பு.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான்  அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் சென்.சேவியர் ஆண்கள் பாடசாலையில்  உருவாக்கப்பட்ட றோல் பந்து மைதானம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டது. 

கெளரவ பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இன்று முன்றாவது தேசிய றோல் பந்து விளையாட்டுப் போட்டிகளும்  சிறப்பாக நடைபெற்றன.

இலங்கை றோல் பந்து சம்மேளனத்தின் அனுசரனையில் இடம் பெற்ற இப் போட்டி நிகழ்வில் இலங்கை றோல் பந்து சம்மேளனத்தின் தலைவரும் பிசன்னமாயிருந்தார்.

மன்னார் யாழ்பாணம் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு கொழும்பு அநுராதபுரம்  போன்ற மாவட்டங்களில் இருந்து வீர வீராங்கனைகள் இப்போட்டிகளில்  கலந்து சிறப்பித்தனர்.

இந்த விளையாட்டு நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளுடன் மன்னார் சென்று.சேவியர் ஆண்கள் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் மற்றும் மன்னார்மாவட்ட விளையாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
மன்னார் சென்.சேவியர் கல்லூரியில் றோல் பந்து மைதானம் திறப்பு - மஸ்தான் M.P பங்கேற்பு மன்னார் சென்.சேவியர் கல்லூரியில் றோல் பந்து மைதானம் திறப்பு - மஸ்தான் M.P பங்கேற்பு Reviewed by Vanni Express News on 2/10/2019 09:37:00 PM Rating: 5