என்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா ? உண்மையை போட்டுடைக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே திறந்து வைக்கின்றார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இன்று காலை வெயாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார். 

இன்று மிகவும் மந்தகதியான முறையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

இந்த அரசாங்கம் செ்யத எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் மக்களால் காண முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
என்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா ? உண்மையை போட்டுடைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா ? உண்மையை போட்டுடைக்கும்  எதிர்க்கட்சித் தலைவர் Reviewed by Vanni Express News on 2/17/2019 12:07:00 AM Rating: 5