எமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் அரசிலமைப்பில் மாற்றம் செய்வேன்

தற்போதைய அரசியலமைப்பிற்கமைவாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட முடியாது, எனினும் சிறந்த ஒருவரை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவோம் என எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ த ஹிந்து பத்திரிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் இன்று பங்கேற்று உரையாற்றினார். 

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர் கூறியதாவது, 

2014ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். 

அதேநேரம் இந்நிகழ்வில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 

´எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட முடியாது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைப்பேன். அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார். அவர் வெற்றிபெற்ற பின்னர் நான் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வேன்´ என்று கூறியுள்ளார். 

அதேநேரம் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ´மக்களை திருப்திப்படுத்த முடியும். ஆனால அரசியல்வாதிகளை முடியாது. அதுதான் எனது பிரச்சினை´ என்று கூறியுள்ளார்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் அரசிலமைப்பில் மாற்றம் செய்வேன் எமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் அரசிலமைப்பில் மாற்றம் செய்வேன் Reviewed by Vanni Express News on 2/09/2019 10:34:00 PM Rating: 5