சந்தையில் உள்ள பால்மாவை உடனடியாக மீளப் பெற வேண்டும்

சந்தையில் உள்ள பால்மாவை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார். 

இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

பால்மா பக்கட்டை திறந்தவுடன் பால்மா தவிர ஏனைய எல்லாம் அதில் அடங்கி இருப்பதாகவும், பால்மாவில் பன்றி எண்ணெய் கலந்திருப்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சந்தையில் உள்ள பால்மாவை உடனடியாக மீளப் பெற வேண்டும் சந்தையில் உள்ள பால்மாவை உடனடியாக மீளப் பெற வேண்டும் Reviewed by Vanni Express News on 2/06/2019 05:31:00 PM Rating: 5