மன்னாரில் பூரண ஹர்த்தால்

- லெம்பட்


வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். 

குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். 

மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, எவ்வித சேவைகளும் இடம் பெறவில்லை. 

பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும், போக்குவரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. 

மேலும் மன்னாரில் உள்ள அரச, தனியார் அலுவலங்களுக்கும் பணியாளர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால் மன்னார் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ள போதும் ஒரு சில உணவகங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
மன்னாரில் பூரண ஹர்த்தால் மன்னாரில் பூரண ஹர்த்தால் Reviewed by Vanni Express News on 2/25/2019 11:55:00 AM Rating: 5