ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்

நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த உறுப்பினர்களின் ஆதரவு தேசிய அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தேசிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதியின் எதிர்ப்பு தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டமும் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி பயப்படுவது தொடர்பில் குறித்த கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அது தொடர்பில் எம்.பி.களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாகவும் சிசிர ஜயக்கொடி எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் Reviewed by Vanni Express News on 2/06/2019 05:59:00 PM Rating: 5