ஒன்றாக போராடி ஒன்றாக வெற்றி காண்போம் - பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அரசு மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் இன்று காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார் மேலும் "பாகிஸ்தான் கூறும் பொய்களை நாம் நம்பக் கூடாது. இந்தியாவை பிரித்தாள பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இந்திய

ராணுவப் படை மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளைநிறுத்துவதே பாகிஸ்தானின் குறிக்கோளாக இருக்கிறது. அத்போல மத்திய அரசு மீது இந்தியா முழு நம்பிக்கையை மக்கள் வைக்க வேண்டும். இந்தியா புதிய வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. ஒன்றாக வாழ்வோம், ஒன்றாக வளர்வோம், ஒன்றாக போராடி வெல்வோம். நாம் மலைபோல உறுதியாக இருந்து எதிரியின் சூழ்ச்சியை வீழ்த்துவோம்" என்று பிரதமர் மோடி ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த

கொடுரத் தாக்குத லை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான நட வடிக்கைகளை இந்தியா, அதிரடியாக எடுத்து வருகிறது.

இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந் தார். அவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய உரை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஒன்றாக போராடி ஒன்றாக வெற்றி காண்போம் - பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக போராடி ஒன்றாக வெற்றி காண்போம் - பிரதமர் நரேந்திர மோடி Reviewed by Vanni Express News on 2/28/2019 05:03:00 PM Rating: 5