வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தால் நடவடிக்கை

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தால் நடவடிக்கை யாழ் முஸ்லிம் மக்களும் ஆதரவு நல்குவர், யாழ், கிளிநொச்சி முஸ்லிம் பேரவை அறிவிப்பு.

யுத்தம் நிறைவடைந்து 9வருடங்கள் முடிவடைகின்ற இத்தருணத்திலும், இராணுவத்தினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்ப்பட்ட முன்னால் போராளிகள், போராளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள், யுத்தம் இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டவர்கள், வேறும் ஆயுதக் குழுக்களினால் கைது செய்யப்பட்டவர்கள் என  பொதுமக்கள், சிறார்கள், பெண்கள் எனப் பல்லாயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற நிலையில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இதுவரை எவராலும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில் இலங்கை அரசாங்கமும் இது குறித்து காத்திரமான எவ்வித முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்கவில்லை. 

இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பு பல மாதங்களாக நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் உரிய தரப்பினரால் கண்டுகொள்ளப்படாத நிலைமையும் இருக்கின்றது. இந்நிலையில் அவர்களால் முழு மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களும் ஆதரவு வழங்குவது என்ற தீர்மானம் யாழ்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

மனிதாபிமான அடிப்படையில் எமது மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறல் வேண்டும் என்ற அடிப்படையில் அகிம்சா ரீதியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை எப்போதும் அங்கீகரிக்கும் எமது நிலைப்பாட்டிற்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றது, 

இவ்வாறான அகிம்சா ரீதியான போராட்டங்கள் எமது மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்குமாக இருந்தாலும் உரிய தரப்பினர்க்கு எமது நியாயமான கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு இவ்வாறான போராட்டங்களும் அவசியப்படுகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்ச் மாவட்ட முஸ்லிம் மக்களும் இந்த ஹர்த்தாலுக்கு தமது முழுமையான ஆதரவை நல்குகின்றார்கள். 

எம்.ஏ.சீ.மஹனாஸ், 
பொதுச் செயலாளர், 
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் பேரவை 
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தால் நடவடிக்கை வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தால் நடவடிக்கை Reviewed by Vanni Express News on 2/24/2019 11:42:00 PM Rating: 5