ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியாளர்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் - நளின் பண்டார

ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சி தொடர்பான விசாரணை அறிக்கையின் தகவல்களை விரைவில் வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சி தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனாதிபதி கொலை சூழ்ச்சி அறிக்கையின் தகவல்களை ஆராயந்து பார்க்கவும், அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளவும் தாம் ஆவலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த அறிக்கையை தங்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியாளர்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் - நளின் பண்டார ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியாளர்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் - நளின் பண்டார Reviewed by Vanni Express News on 2/13/2019 11:51:00 PM Rating: 5