மீரிகம வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம்

- ஐ. ஏ. காதிர் கான் 

மீரிகம வைத்தியசாலை வளவில் புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரால், அண்மையில் நட்டு வைக்கப்பட்டது.

இதன்மூலம், மீரிகம வைத்தியசாலையின் மிக நீண்டநாள் குறையாகவுள்ள கட்டிடத் தேவையின் பணிகள், மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு, கட்டிட வேலைகள் பூர்த்தியானதும், மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என்று, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இங்கு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
மீரிகம வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் மீரிகம வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் Reviewed by Vanni Express News on 2/25/2019 11:47:00 AM Rating: 5