எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மின் வெட்டு

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் இவ்வாறு மின் வெட்டு அமுல் படுத்தப்படுமென பிரதேச மின்சார பொறியியளாளர் ஏ.சிவதீபன் தெரிவித்தார். 

திருத்த வேளைகள் மற்றும் புதிய மின்சார தொடர்புகளை ஏற்படுத்தல் சம்பந்தமாக இம் மின் வெட்டு அமுல்படுத்தப்டுவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மின் வெட்டு எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மின் வெட்டு Reviewed by Vanni Express News on 2/12/2019 05:29:00 PM Rating: 5