புத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது ?

நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

அந்தக் குப்பைகளை கடலில் போடவும் முடியாது. அவ்வாறு போட்டால் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

குப்பைகளைப் போடுவதற்கு எதிராக கிராமங்களில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் அன்பான விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். நாம்  உடம்புக்குள் உட்கொள்ளும் உணவு தவிர்ந்த ஏனைய அத்தனையும் குப்பைகளாகவே சேர்கின்றன.

தற்பொழுது குப்பை முகாமை செய்வதற்குள்ள நவீன முறைமையை பொருத்தமான ஒர் இடத்தில் அமைப்பதன் மூலமே இந்தக் குப்பை பிரச்சினைக்கு தீர்வை வழங்கலாம். 

இவ்வாறு செய்வதனால் அயலவர்களுக்கும், கிராமத்தில் வாழும் மக்களுக்கும் எந்தவொரு பிரச்சினையும் எழுவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது ? புத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது ? Reviewed by Vanni Express News on 2/16/2019 10:59:00 PM Rating: 5