மாலி நாட்டில் உயிர்நீத்த இராணுவ வீரரின் வீட்டிற்கு ஜனாதிபதி விஜயம்

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் பணியிலிருந்தபோது உயிர்நீத்த மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். 

பொலன்னறுவை அபயபுர பிரதேசத்தில் உள்ள மேஜர் ஜயவிக்ரமவின் வீட்டுக்கு இன்று (02) முற்பல் சென்ற ஜனாதிபதி, அவரது தாயாரான யு.டி.பிரேமகாந்தி மற்றும் தந்தை கமன்கொட ஜயவிக்ரம ஆகியோரிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். 

மாலி நாட்டில் உயிர் நீத்த இராணுவ வீரர்கள் இருவரினதும் பூதவுடல்கள் விரைவில் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், இது தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்தார். 

தாய் நாட்டுக்கு புகழை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஐ.நா. சமாதான செயன்முறையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த இந்த உன்னத வீரர்களின் மரணம் குறித்து தான் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் விசேட அனுதாப குறிப்பொன்றை பதிவு செய்தார். 
மாலி நாட்டில் உயிர்நீத்த இராணுவ வீரரின் வீட்டிற்கு ஜனாதிபதி விஜயம் மாலி நாட்டில் உயிர்நீத்த இராணுவ வீரரின் வீட்டிற்கு ஜனாதிபதி விஜயம் Reviewed by Vanni Express News on 2/03/2019 02:28:00 PM Rating: 5