வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர்

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். 

மூன்று நாட்கள் வடக்கில் தங்கியிருக்கும் பிரதமர் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதில் முதலாவது நிகழ்வாக கோப்பாய் பிரதேச புதிய கட்டிடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்டச் செயகத்தில் உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

இந் நிகழ்வில் அமைச்சர்களான அர்ஐுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன, அகிலவிராஐ் காரியவசம், சாகல ரத்னாயக்கா, வஜிர அபயவர்த்தன, இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் உட்பட அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதனைத்தொடர்ந்து யாழில் நடைபெறும் பல நிகழ்வுகளிலும் பிரதமர் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு நாளையும் நாளை மறுதினமும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கும் இக் குழுவினர் சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் Reviewed by Vanni Express News on 2/14/2019 05:37:00 PM Rating: 5