பால்மாக்களில் பன்றி​ எண்ணெய் இல்லை - அமைச்சர் ராஜித்த

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென, சுகாதார மற்றும் போசனை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (07), விசேட உரையாற்றிய அமைச்சர்; புத்திக்க பத்திரண எம்.பியால், பால்மா தொடர்பில், தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்றும் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
பால்மாக்களில் பன்றி​ எண்ணெய் இல்லை - அமைச்சர் ராஜித்த பால்மாக்களில் பன்றி​ எண்ணெய் இல்லை - அமைச்சர் ராஜித்த Reviewed by Vanni Express News on 2/07/2019 06:20:00 PM Rating: 5