27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை

மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
அதன்படி விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கூறினார். 

றத்மலானையிலுள்ள அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை Reviewed by Vanni Express News on 2/08/2019 04:40:00 PM Rating: 5