சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

- ஊடகப்பிரிவு

குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது. இதன் போது,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்ததை திறந்து வைத்தார். 

இதன் போது, பாடசாலையின் அதிபர் எல் எஸ் யமீனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி, தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் பாரியார் உட்பட குடும்பத்தினர், புத்தளம் மாவட்ட செயலாளர் சித்திராந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு Reviewed by Vanni Express News on 2/24/2019 05:38:00 PM Rating: 5