haiiii

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகிவிட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்

-ஊடகப்பிரிவு

30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில்,மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாத்தாண்டிய, தும்மோதர முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

நாம் எந்த விதமான சச்சரவுக்கும் செல்லாமல் இருந்த போதும் எங்களை வேண்டுமென்றே பிரச்சினைக்காரர்களாக காட்டுகின்ற ஒரு செயற்பாடு அல்லது ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற சில தவறுகளை முழுச்சமுதாயத்தினதும் தவறுகளாகச் சித்தரிக்கும் செயற்பாடு தற்போது மிகவும் திட்டமிட்டு,நாசூக்காக முன்னெடுக்கப்படுகின்றன. நமது சமூகத்தவர்களை பிழையானவர்களாக காட்டுவதில் சில ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. இதன் மூலம் நமது இளைஞர்களை ஆத்திரமூட்டச்செய்வதே அவர்களின் இலக்காக இருக்கின்றது. இந்த தருணத்திலே நாம் நிதானமாக சிந்திக்க வேண்டிய நிலையிலும் தூரநோக்குடன் செயல்பட வேண்டிய  கட்டத்திலும் இருக்கின்றோம்.

இந்த நிலையில்அகில இலங்கை ஜம்யத்துல் உலமா,சமூகம் சார்ந்த சிவில் அமைப்புகள், முஸ்லிம் சமூக அரசியல் கட்சிகள் தமது கருத்து வேறுபாடுகளை களைந்து எதிர் நிலைச்செயற்பாடுகளை எவ்வாறு எதிர்நோக்குவது? மற்றும் சமூகத்தை எந்த வகையில்வழிநடாத்துவது? என்பது தொடர்பில் திட்டமிட்டு செயலாற்றிவருகின்றது. 

ஜனாதிபதியோ,பிரதமரோ நமக்கு ஏற்பட்டுள்ள,ஏற்படப்போகின்ற ஆபத்துகளைத்தீர்ப்பதற்காக வலிந்து தமது நேரத்தை ஒதுக்கி விமோசனம்பெற்றுத் தருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது.அவ்வாறுநாம்எண்ணவுமில்லை. அவர்களுக்கு நாம் வழங்குகின்ற அழுத்தங்கள் மூலமே எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்எனநம்புகின்றோம்.அதனை நாங்கள் இயன்றளவுசரியாக செய்தும் வருகின்றோம்.

பாடசாலையின் அதிபர் சாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, சிலாபம் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி சாதிகுல்அமீன், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பெர்ணாண்டோபுள்ளே மற்றும் டாக்டர் இல்யாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4809,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11038,கட்டுரைகள்,1388,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3204,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2074,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகிவிட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்
முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகிவிட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்
https://2.bp.blogspot.com/-hTYDE4_Oijc/XFlxerLdyQI/AAAAAAABTUM/IMUC7b-0egEUr1VrIOkmicGQqc0m2OsswCEwYBhgL/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-hTYDE4_Oijc/XFlxerLdyQI/AAAAAAABTUM/IMUC7b-0egEUr1VrIOkmicGQqc0m2OsswCEwYBhgL/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/02/rb_5.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/02/rb_5.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy