இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) கலந்து கொண்டார்.

பாடசாலையின் அதிபர் ஆர் லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன், பிரதேச செயலாளர் உதயராசா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மது, மொஹிதீன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் Reviewed by Vanni Express News on 2/09/2019 11:12:00 PM Rating: 5