சம்பா அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க இணக்கம்

ஏப்ரல் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 

இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள் சிறிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் விவசாய அமைச்சு அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதன்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. அமைச்சர் பீ.ஹரிசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஒரு கிலோ நெல்லின் விலையைப் போன்று இருமடங்கு விலைக்கு அரிசியை விநியோகிக்கலும் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்னர். 

இந்தக் கூட்டத்தில் பெரும்போக அறுவடை நெல்லை விலைகொடுத்து வாங்கும் நடைமுறையில் அரசாங்கத்தின் உத்தரவாத விலைப்பட்டியலை தத்தமது களஞ்சியசாலைகளில் காட்சிப்படுத்த ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தார்கள். 

இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும். 
சம்பா அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க இணக்கம் சம்பா அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க இணக்கம் Reviewed by Vanni Express News on 2/01/2019 04:11:00 PM Rating: 5