வழக்கு தொடர வேண்டியது காலத்தின் தேவை - சட்டத்தரணி றிபாஸ்

- ஊடகப்பிரிவு

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட காணிகள் கவளிகரம் செய்யப்படுவதை தடுக்க உடனடியாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரசின் சட்டவிவகார,கொள்கை அமுலாக்கள் மேலதிக செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார். 

இன்று (25) மாலை கௌரவ மேயர் ஏ.எம் .ரஹீப் தலைமையில் ஆரம்பமான கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அவர் 

கல்முனை மாநகர சபை கௌரவ மேயர் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் அண்மையில் தாக்கப்பட்ட விடயம் மிகவும் வேதனையான ஒன்று அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பது எல்லைகளில் உள்ள பிரச்சினைகளே. அவற்றை பற்றி நாம் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம். மாவட்ட செயலாளர்கள், நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பிரயோசனமில்லாது இருப்பதால் நாம் ஒற்றுமையாக செயற்பட்டு வழக்கு தொடர வேண்டும் என்றார்.
வழக்கு தொடர வேண்டியது காலத்தின் தேவை - சட்டத்தரணி றிபாஸ் வழக்கு தொடர வேண்டியது காலத்தின் தேவை - சட்டத்தரணி றிபாஸ் Reviewed by Vanni Express News on 2/25/2019 11:42:00 PM Rating: 5