தற்காலிகமாக மார்ச் 2 ஆம் திகதி வரை மூடப்படும் கடுவலை - பியகம வீதி

- ஏ. காதிர் கான்

கடுவலை பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், கடுவலை - பியகம வீதி ஐந்து நாட்களுக்கு, இரவு வேளையில் வாகனப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வீதி, எதிர்வரும் இரண்டாம் திகதி வரை இரவு பத்து மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை இவ்வாறு மூடப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கடுவலை - பியகம வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும், பொலிஸார் சாரதிகளைக் கேட்டுள்ளனர்.

மாற்று வழியாக, அதிவேக வீதியின் மேம் பாலத்தை சாரதிகள் பயன்படுத்தலாம் என்றும், பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மார்ச் 2 ஆம் திகதி வரை மூடப்படும் கடுவலை - பியகம வீதி தற்காலிகமாக மார்ச் 2 ஆம் திகதி வரை மூடப்படும் கடுவலை - பியகம வீதி Reviewed by Vanni Express News on 2/27/2019 04:27:00 PM Rating: 5