முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

தொம்பே, கிரிதர பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. 

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அங்கு கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொள்ளையர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி 210,800 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை Reviewed by Vanni Express News on 2/06/2019 05:02:00 PM Rating: 5