காணாமல் போன புத்தளம் சிறுமிக்கு நடந்தது இதுதான் - தாயாரின் பதறவைக்கும் வாக்குமூலம்

காணாமல் போனதாக கூறப்படும் புத்தளம் - கருவலகஸ்வெவ - நீலபெம்ம பிரதேசத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை கலா வாவியில் வீசியதாக அவரது தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த தாய் சிறுமியை தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் சிறுமி மயக்கமடைந்துள்ள நிலையில் , அச்சமடைந்த தாய் மயக்கமடைந்த சிறுமியை கலா ஓயாவில் வீசியதாக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேகநபரான தாய் தற்போதைய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ,குறித்த பெண் வழங்கிய தகவலுக்கு அமைய சுழியோடிகள் கலா வாவியில் தேடுதல் நடவடிக்கையை தற்போதைய நிலையில் ஆரம்பித்துள்ளனர்.

செனொரி நிஷாரா என்ற நான்கு வயது சிறுமி கருவெலகஸ்வெவ - நீலபெம்ம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த 29ஆம் திகதி காணாமல் போனார்.

இதையடுத்து, குறித்த சிறுமியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், தற்போதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன புத்தளம் சிறுமிக்கு நடந்தது இதுதான் - தாயாரின் பதறவைக்கும் வாக்குமூலம் காணாமல் போன புத்தளம் சிறுமிக்கு நடந்தது இதுதான் - தாயாரின் பதறவைக்கும் வாக்குமூலம் Reviewed by Vanni Express News on 2/03/2019 05:25:00 PM Rating: 5