பசுமையான தேசம் நோக்கி மக்கள் நகர்வார்கள் பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் நம்பிக்கை

-Vamathevan Thayalan

பசுமையான தேசம் நோக்கி மக்கள் நகர்வார்கள் கரவெட்டி கரணவாய் கிழக்கு பிரதேச கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்களுடனான குறைகேள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடல் இன்று (7) மாலை மீள் எழுச்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்கள், விவசாய உட்கட்டுமான வசதிகள், விளையாட்டு கழகங்களுக்கான உபகரண வசதிகள் குறித்து, குறைகேள் மற்றும் முன்னிலைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி குழுவின் செயற்பாட்டு கூட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த மக்கள் சார்பாக கோரிக்கையாக  முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது மக்கள் குறைகேள் சந்திப்பில் இணைந்திருந்த முன்னாள் விவசாய பிரதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் வடமராட்சி கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்கள் ஜனநாயக சமூக மக்களின் அபிவிருத்தி நலன் கருதிய எமது செயற்பாடுகள் மூலம் கிராம மக்கள் மேம்பாடுகள் குறித்து அதீத கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் மக்களின் குறைகள் நிறைகளாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதேச கிராம மக்களின் தேவைகளும் எமது சேவைகள் மூலம் தீர்வுகள் பெற்று தரப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.

கிராமத்தின் இளைஞர், யுவதிகளுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
பசுமையான தேசம் நோக்கி மக்கள் நகர்வார்கள் பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் நம்பிக்கை பசுமையான தேசம் நோக்கி மக்கள் நகர்வார்கள் பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் நம்பிக்கை Reviewed by Vanni Express News on 2/07/2019 10:58:00 PM Rating: 5