பு / உலுக்காபள்ளம் மு.ம.வி.பாடசாலை இரு மாடிக் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு

- A.C.M.பைசல்

வணிக கைதொழில் நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளோர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் புத்தளம் உலுக்காப்பள்ள மு.ம.வித்தியாலைய பாடசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம் அமைப்பதற்கான நிதி விடுவிப்புக் அனுமதிக் கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.

ஹூசைனியாபுரம் ACMCயின் முக்கிய போராளிகள், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நௌபீல் மற்றும் ஊர்மக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்  என பலரும் கௌரவ அமைச்சரிடம் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த இரு மாடிக் கட்டித்திற்கான நிதி அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணியால்  ஒதுக்கப்பட்டுள்ளது .

110* 25 அளவு கொண்ட இந்த இரு மாடி கட்டிட நிதி விடுவிப்புக்கான அனுமதி கடிதம் உத்தியோக பூர்வமாக இன்று (2019.02.25) காலை கல்லூரியின் அதிபர் M.M.முஹ்தார் அவர்களிடம் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நௌபீல் அவர்களின் தலைமையில்  கையளிக்கப்பட்டது.
பு / உலுக்காபள்ளம் மு.ம.வி.பாடசாலை இரு மாடிக் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு பு / உலுக்காபள்ளம் மு.ம.வி.பாடசாலை இரு மாடிக் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு Reviewed by Vanni Express News on 2/25/2019 05:41:00 PM Rating: 5