சிலாவத்துறை காணியை விடுவிக்க முடியாது - கடற்படை ஊடகபேச்சாளர் இசுரு சூரிய பண்டார

- ஜே.எப்.காமிலா

பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டி உள்ளது. முகாம் உள்ள காணி பிரதேசத்தை விடுவிக்க முடியாது.

முசலி பிரதேச சபைக்குற்பட்ட சிலாவத்துறை ,முள்ளிக்குளம் பகுதிகளில் மக்களுக்குச்சொந்தமான காணிகளில் ,கடற்படையினர் நீண்ட காலமாக முகாம்களை அமைத்துள்ளனர்.

இப்பிரதேச மக்கள் யுத்தம் காரணமாக விடுதலை புலிகளால் 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

இக்காணிகளை பொதுமக்களுக்கு மீளவும் வழங்குமாறும் பதிலாக கடற்படையினரை வேறு இடங்களுக்கு இடம் பெயருமாறும் , நீண்ட நாட்களாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹுனைஸ் பாறுக் முன்னால் எம்.பி போன்ற அரசியல்வாதிகளும் நீண்ட காலமாக அரசை கோரி வருகின்றனர்.

பொறுமை தாளாமல் ,கடந்த வாரம் மக்கள் சாத்வீக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக கடற்படை ஊடகபேச்சாளர் இசுரு சூரிய பண்டார எமக்கு கருத்து தெரிவிக்கையில்"

அரச அதிபர் தந்த புள்ளிவிபரப்படி ஏற்கனவே மொத்தம் 66 நபர்கள் மட்டுமே குடியிருந்ததாகவும் அவர்களில் தற்போது 38பேர்கள் இதில் உயிருடன் இல்லை என்பதால் எஞ்சிய 28பேருக்கு மட்டுமே காணிகளை விடுவிக்க கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இவ்வருடம் தலா 20பேர்ச் வீதம்12பேருக்கு வழங்கி உள்ளதாகவும் அதில் 4 பேருக்கு வீடமைப்பு வசதியும் வழங்கப்பட்டதாகவும் , தற்போதுஇப்பகுதி மக்கள் கூடுதலாக இருப்பதால் முழுக்காணியையும் விடுவிக்க கோருவதாகவும் இருப்பினும் ஏற்கனவே பல பேச்சு வார்த்தைகள்,கூட்டங்களில் மக்கள் கடற்படையினரின் முடிவுகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும்குறிப்பிட்டார்.

இதேவேளை தேசிய பாதுகாப்பு ,கடல்சார் பாதுகாப்பு,சட்டவிரோத கடத்தல்களை தடுத்தல் மற்றும் டைனமைட் பாவித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்தல் போன்ற காரணங்களுக்காக இந்த முகாம் உள்ள காணி பிரதேசத்தை விடுவிப்பது சாத்தியமற்ற ஒன்றாகும் எனவும் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வழங்கினார்.
சிலாவத்துறை காணியை விடுவிக்க முடியாது - கடற்படை ஊடகபேச்சாளர் இசுரு சூரிய பண்டார சிலாவத்துறை காணியை விடுவிக்க முடியாது - கடற்படை ஊடகபேச்சாளர் இசுரு சூரிய பண்டார Reviewed by Vanni Express News on 2/26/2019 11:24:00 PM Rating: 5