ஜனாதிபதி வேட்பாளராக சிராந்தி ? அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக ராஜபக்ஷ குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் இந்திய தூதரக அதிகாரிகள் பலர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என நாமல் ராஜபக்ஷவிடம் வினவியுள்ளனர். இதன்போது தனது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கே ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி வேட்பாளராக சிராந்தி ? அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் ஜனாதிபதி வேட்பாளராக சிராந்தி ? அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் Reviewed by Vanni Express News on 2/12/2019 06:18:00 PM Rating: 5