சிப்லி பாறூக் SLMC கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக நியமனம்

- எம்.ரீ. ஹைதர் அலி - பழுலுல்லாஹ் பர்ஹான்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமினால் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் 22 நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிப்லி பாறூக் SLMC கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக நியமனம் சிப்லி பாறூக் SLMC கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக நியமனம் Reviewed by Vanni Express News on 2/24/2019 11:26:00 PM Rating: 5