இல்ல விளையாட்டு போட்டியில் எல்லையில்லா மகிழ்ச்சியில் வரிப்பத்தான்சேனை

-Sahabdeen Mohamed Sajith

அம்பாறை மாவட்டத்தின் வரிப்பத்தான்சேனை கிராமத்திலுள்ள சது/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வு 30.01.2019 புதன்கிழமை மிகவும் கோலாகலமாக  அதிபர் எஸ்.எல். கலந்தர் லெப்பை (மௌலவி ) அவர்களது தலமையில் இடம்பெற்றது. 

மிகவும் சுவாரஷ்யமான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊர்மக்கள் அனைவருமாக சேர்ந்து மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் MIM.மன்சூர் கலந்துகொண்டார். இறக்காமம் கோட்டக்கல்வி அதிகாரி .மஹ்மூத் லெவ்வை சேர் , வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் SM.ஹாமிது லெவ்வை (மதனி) மற்றும் இறக்காம பிரதேச சபை உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.  

இப்போட்டியில் ஷாபிஈ (பச்சை), ஹனபீ (நீலம்), ஹன்பலி (மஞ்சள்) இல்லங்களுக்கிடையிலான கடுமையான போட்டியில் நடுவர்கள் புள்ளியிடும் பணிகளை மிக நேர்த்தியாக செய்து முடித்தனர். அதன்படி பச்சை இல்லம் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. 

நீலம், மஞ்சள் என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் பழைய ஆசிரியர்கள், பெற்றார்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்புகளும் சங்கமித்த நிகழ்வாக இது அமைந்ததுடன், விழாவின் இறுதியில் பாடாசாலையின் பழைய மாணவர் சங்க தலைவரினால் அதிபர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

பொதுவாக அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றமையால் முழு வரிப்பத்தான்சேனை மக்களும் அன்றைய தினம் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கியிருந்தனர்.
இல்ல விளையாட்டு போட்டியில் எல்லையில்லா மகிழ்ச்சியில் வரிப்பத்தான்சேனை இல்ல விளையாட்டு போட்டியில் எல்லையில்லா மகிழ்ச்சியில் வரிப்பத்தான்சேனை Reviewed by Vanni Express News on 2/01/2019 04:03:00 PM Rating: 5