சிலாபம் - நீர்கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி நிறுத்தம்

சிலாபம் - நீர்கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

சிலாபம் - நீர்கொழும்பு பஸ் நடத்துனர் ஒருவருக்கு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்து வேலை நிறுத்தம் செய்வதாக சிலாபம் - நீர்கொழும்பு பஸ் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

41 வயதுடைய தனியார் பஸ் நடத்துனர் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது அவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை அமுலாக்குமாறு சிலாபம் பொதுப் போக்குவரத்து அமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிலாபம் - நீர்கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி நிறுத்தம் சிலாபம் - நீர்கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி நிறுத்தம் Reviewed by Vanni Express News on 2/07/2019 04:50:00 PM Rating: 5