கொட்டகலை மேபீல்ட் தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு

- க.கிஷாந்தன்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாலயத்தின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

2018.04.20 அன்று இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதன்போது அம்மனுக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு புகார் செய்யப்பட்டதையடுத்து இன்று வியாழக்கிழமை பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் ஆலய கட்டிடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டகலை மேபீல்ட் தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு கொட்டகலை மேபீல்ட் தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு Reviewed by Vanni Express News on 2/14/2019 04:12:00 PM Rating: 5