ரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் ?

-D.C

சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்டிக் கொள்ளவில்லையெனவும், மாகந்துரே மதூஷுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார்.

தேசிய சங்க சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) இடம்பெற்றது. இதில் மதூஷ் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

போதை ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதே இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
ரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் ? ரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் ? Reviewed by Vanni Express News on 2/13/2019 10:53:00 AM Rating: 5