இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது

காஷ்மீரில் துணை இராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார். 

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் அவரிடம் பேட்டி கண்ட ஊடகவியலாளர்கள், காஷ்மீர் தாக்குதலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, தற்போதைய நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மிக மிக மோசமான சூழல் நிலவுகிறது. ஒரு ஆபத்தான சூழல் அது. இந்த பகையுணர்வு நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 

எனவே இந்த பதற்றமான சூழல் முடிவுக்கு வரவேண்டும். இந்த சமாதான நடவடிக்கையில் நாங்கள் நிறைய ஈடுபட்டு உள்ளோம். இந்த பதற்றமான சூழலில் இந்தியா சற்று வலுவான நிலையில்தான் இருக்கிறது. ஏனெனில் இந்த தாக்குதலால் அவர்கள் சுமார் 50 பேரை இழந்து இருக்கின்றனர். என்னால் அதையும் உணர முடிகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது Reviewed by Vanni Express News on 2/24/2019 11:34:00 PM Rating: 5