மஸ்தான் எம்.பி பயணித்த வாகனம் விபத்து - மூவர் வைத்தியசாலையில்

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. 

பூனேவ, மககும்புகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒரு கடும்பத்தைச் ​சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பெரியஉலுக்குளம பிரதேசத்தைச் ​சேர்ந்த காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வேறொரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மஸ்தான் எம்.பி பயணித்த வாகனம் விபத்து - மூவர் வைத்தியசாலையில் மஸ்தான் எம்.பி பயணித்த வாகனம் விபத்து - மூவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 3/16/2019 02:18:00 PM Rating: 5