இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம்

பதுளை - இரத்தினபுரி பிரதான வீதியில் பெல்மடுல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துமே நேற்றைய தினம் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பல்கலைக்கழக மாணவர்களே சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் பெல்மடுல்லை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று அங்கிருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -  15 பேர் காயம் Reviewed by Vanni Express News on 3/04/2019 01:06:00 PM Rating: 5